ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சரக்கடிக்கும் காட்சி இனி என் படத்தில் எப்போதும் கிடையாது: உதயநிதி உறுதி

தமிழ்சினிமாவில் கடந்த சில வருடங்களாக  ஹீரோக்கள் சோகமான மற்றும் சந்தோசமான தருணங்களில் டாஸ்மாக் உட்பட மதுபான விடுதிகளுக்கு சென்று குடிப்பது போல் கட்சி

News image
Updated On :18 மார்ச் 2014, 11:07 am

வேல்முருகன்

தமிழ்சினிமாவில் கடந்த சில வருடங்களாக  ஹீரோக்கள் சோகமான மற்றும் சந்தோசமான தருணங்களில் டாஸ்மாக் உட்பட மதுபான விடுதிகளுக்கு சென்று குடிப்பது போல் கட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதாக புகார் எழுந்து வருகிறது.

 மேலும்  விஜய், அஜீத் உட்பட  முன்னனி நடிகர்களை தங்கள் கனவு நாயகனாக சித்தரித்து கொண்டு, அவர்கள் திரைபடங்களில் செய்யும் காட்கிளை , ரசிகர்கள்அப்படியே பின்பற்றுவதால், மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட காட்சிகளை தவிர்க்க வேண்டும் எனறு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி தான் இனி நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இனி கண்டிப்பாக  எப்போதும் இடம் பெறாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள், மேலும் நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க கூடாது.

எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனிநடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். அதன்படி இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்கிள் இருக்காது என்றார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் மது அருந்துவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்ததும் ,தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி முன் சந்தானம் மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.