ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாடலுக்காக 24 மணி நேரம் முத்தம் கொடுத்துக்கொண்ட இம்ரான் - கங்கனா ரனாவத்!

இந்தியாவிலேயே முதல்முறையாக லிப் டூ லிப் கிஸியான் என்கிற பாடலுக்காக

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 7:45 am

ஐஏஎன்எஸ்

கட்டி பட்டி (Katti Batti) என்கிற ஹிந்திப் படத்தில் இம்ரான் கான் - கங்கனா ரனாவத் ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கான ஒரு பாடலில், லிப் டூ லிப் காட்சி இடம்பெறுகிறது. அது படமாக்கப்பட்ட விதம் தான் இந்திய சினிமாவில் யாரும் கேள்விப்பட்டிராதது.

பொதுவாக இதுபோன்ற காட்சிகளுக்கு அதிக டேக் எடுத்தார்கள் என்றுதான் செய்தி வரும். சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷ், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக படமாக்கப்பட்ட லிப் டூ லிப் கிஸ் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினார் என்றொரு செய்தி வெளிவந்தது. ஆனால் லிப் டூ லிப் கிஸியான் என்கிற பாடலை படமாக்கப்பட்டபோது இம்ரானும் கங்கனாவும் ஒட்டுமொத்தமாக 24 மணி நேரம் முத்தம் கொடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்டாப்மோஷன் டெக்னாலஜி, லிப் டூ லிப் கிஸியான் என்கிற பாடலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்காக தினமும் 8 மணி நேரம் என மொத்தம் மூன்று நாள்களாக இம்ரான் கான் - கங்கனா ரனாவத் பங்கேற்ற முத்தக் காட்சி படமாக்கப்பட்டது என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள். ஓ காதல் கண்மணி போல இந்தப் படமும் லிவ் இன் உறவு பற்றியது.

நிகில் அத்வானி இயக்கியுள்ள கட்டி பட்டி, செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.