ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மணி ரத்னம் படம்: துல்கருக்குப் பதிலாக நானி!

கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணி ரத்னத்தைச் சந்தித்தார். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

News image
Updated On :8 அக்டோபர் 2015, 8:36 am

ஐஏஎன்எஸ்

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் துல்கர் 2 மலையாளப் படங்களில் பிஸியாக உள்ளார். டிசம்பருக்குள் அந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக வேறு நடிகரைத் தேர்வு செய்துள்ளார் மணி ரத்னம்.

‘கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணி ரத்னத்தைச் சந்தித்தார். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். துல்கருக்குப் பதிலாக நானி நடிக்கக்கூடும்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.