விக்ரம் - பாலா மீண்டும் இணைகிறார்களா?
சமீபத்தில் இருவரும் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் தான் எல்லாமே உள்ளன.


இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் சேது, பிதாமகன் என இரு படங்களில் நடித்துள்ளார் விக்ரம். இரண்டு படங்களிலும் அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இப்போது இயக்குநர் பாலாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இருவரும் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் தான் எல்லாமே உள்ளன. இனி வரும் நாள்களில் தான் இருவரும் இணைந்து படம் பண்ணப் போவது குறித்து தெரிய வரும் என பாலா-விக்ரமின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இதனால், இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த பாலா - விக்ரம் கூட்டணி, ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப் போகிறார்களா என கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...