ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மெளலி - கிரேஸி மோகனுடன் பரமபதத்தில் இணையும் கமல்!

பல வருடங்களுக்குப் பிறகு கமலின் படத்துக்கு வசனம் எழுதுகிறார் கிரேஸி மோகன். மெளலி இயக்கும் படத்தில்தான் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2016, 7:12 am

ஐஏஎன்எஸ்

கமல் - கிரேஸி மோகன் கூட்டணியை விரும்பாதவர்களும் எதிர்பார்க்காதவர்களும் உண்டா?

பல வருடங்களுக்குப் பிறகு கமலின் படத்துக்கு வசனம் எழுத உள்ளார் கிரேஸி மோகன். மெளலி இயக்கும் படத்தில்தான் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்துக்கு பரமபதம் என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி ஆகிய படங்களுக்குப் பிறகு கமல் - மெளலி கூட்டணி மீண்டும் இணைகிறது.

இதுதவிர, மற்றொரு படத்திலும் கமல் நடிக்க உள்ளார். டி.கே. ராஜீவ் குமார் இயக்கும் படத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். 1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைய உள்ளார் கமல்.

இந்த இரு படங்களும் மே மாதம் தொடங்க உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.