ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தெலுங்குப் படத்தில் நடிகை சாய் பல்லவி?

பிரேமம் என்கிற மலையாளப் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் சாய் பல்லவி. அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து மருத்துவர் ஆகியுள்ளார்.

News image
Updated On :30 மே 2016, 7:14 am

ஐஏஎன்எஸ்

Story image

பிரேமம் என்கிற மலையாளப் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் சாய் பல்லவி. அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து மருத்துவர் ஆகியுள்ளார்.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார் சாய் பல்லவி. கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அறிமுகமாகவேண்டும் என்று இருந்த சாய் பல்லவியும் மணி ரத்னம் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் அதன்பிறகு கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர் அந்தப் படத்திலிருந்து விலக நேர்ந்தது.

பிரேமம் உள்ளிட்ட இரு மலையாளப் படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி அடுத்ததாக தெலுங்குப் படங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

‘வருண் தேஜ் நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கும் படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டம் உள்ளது. ஒப்பந்ததில் சாய் பல்லவி இன்னும் கையெழுத்திடவில்லை. சமீபத்தில் மருத்துவராகியுள்ள சாய் பல்லவி, தற்போது முழு நேர நடிகையாக திட்டமிட்டுள்ளார். எனவே அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

சேகர் கம்முல்லாவின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அது சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமாக இருக்கும்.  மேலும், ராஜீவ் மேனன் இயக்கும் தமிழ்ப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்திலும் சாய் பல்லவியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.