பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாரதிராஜா மறைவு: நாளை ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து!

பாரதிராஜா மறைவையடுத்து அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது பற்றி...

News image

பாரதிராஜா - கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2026, 11:58 am IST

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து நாளை (ஜூன் 11) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரது இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதல்வர் ஜோசப் பிஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் பாக்யராஜ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ராசிகா, சீமா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தென்னிந்திய திரையுலகில் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

The Producers' Council has announced that all film shoots scheduled for tomorrow (June 11) are cancelled following the demise of renowned director Bharathiraja due to ill health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.