சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம்! அமீர் கான்

'தாரே ஜமீன் பார்', '3 இடியட்ஸ்' மற்றும் 'பி கே' போன்ற திரைப்படங்கள் யாவும், மொழி என்ற ஒன்றை தாண்டி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம்! அமீர் கான்

'தாரே ஜமீன் பார்', '3 இடியட்ஸ்' மற்றும் 'பி கே' போன்ற திரைப்படங்கள் யாவும், மொழி என்ற ஒன்றை தாண்டி, எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றது. அதுமட்டுமன்றி, ஆங்கில திரையுலகினரின் கவனத்தையும் அதிகளவில் ஈர்த்த பெருமை இந்த திரைப்படங்களுக்கு உண்டு. இவை அனைத்திற்கும் ஆணி வேர் -  ஒரு பெயர் - அமீர் கான். தற்போது இவர் தயாரித்து, நடித்திருக்கும் 'யுத்தம்' (தங்கல்) திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி, இந்த திரைப்படத்தை வரவேற்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர். 

அமீர் கான் - கிரண் ராவ் - சித்தார்த் ராய் கப்பூர் தயாரித்து, UTV மோஷன் பிச்சர்ஸ் வெளியிடும்  'யுத்தம்' (தங்கல்) திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் நிதேஷ் திவாரி. அமீர் கான் - சாக்ஷி தன்வர் - பாத்திமா சனா ஷாயிக் -  சான்யா மல்ஹோத்ரா - சாய்ரா வசிம் - சுஹானி பட்னாகர் ஆகியோர்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  'யுத்தம்' (தங்கல்)  திரைப்படத்தில், தலைச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சேட்டு, இசையமைப்பாளர் பிரீத்தம் மற்றும் படத்தொகுப்பாளர் பல்லு சலுஜா பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. 'அன்பிலும், அரவணைப்பிலும் உருவாகி இருக்கிறது  எங்களின்  'யுத்தம்' (தங்கல்) . ஆண் - பெண் இருவருமே சமம் என்பது தான்  'யுத்தம்' (தங்கல்) படத்தின் கதை கரு. நம் இந்திய நாட்டில் ஏராளமான, திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஈடு இணையாக, எந்த விதத்திலும் குறைவின்றி விளையாட்டு வீராங்கனைகள் உதயமாக  வேண்டும். உதயமாவார்கள். விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  'யுத்தம்' (தங்கல்)  போன்ற திரைப்படங்கள் அவர்களின் உள்ளத்தில் விதைக்கும். 'தாரே ஜமீன் பார்' - '3 இடியட்ஸ்' போன்ற தரமான திரைப்படங்களின் வரிசையில் 'யுத்தம்' (தங்கல்)  திரைப்படமும் இடம்பெறும் என்பது உறுதி.

'யுத்தம்' (தங்கல்)  படத்திற்காக கடினமாக உழைத்த இந்த பெண்களோடு இணைந்து பணியாற்றியது எனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் ஏராளமானவற்றை கற்று கொண்டேன் என்பதுதான் உண்மை. இந்த இளம் வயதில் இந்த பெண்கள் நடிப்பில் சோபிப்பதை பார்க்கும் போது  என்னுடைய 27 வருட அனுபவம்  சிறியது ஆகி விடுகிறது. என்னுடைய மகள் 'அய்ரா'  ஒரு கால்பந்து வீராங்கனை என்பதை தற்போது நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. என் மகள் என்னை போல நடிப்பில் ஆர்வம் கொண்டு, திரையுலகில் கால் பதித்தால், நான் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.

ஒரு திரைப்படத்தின் கதையை கேட்கும் பொழுது நான் எப்பவுமே ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பேன். அப்போதுதான் அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். நடிப்பிற்கு மொழி அவசியமில்லை. எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடனும், தெலுங்கில் சிரஞ்சீவி சாருடனும் நடிக்க எனக்கு ஆசை இருக்கின்றது’ என்று கூறினார் அமீர் கான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com