/

சீனாவில் வெளியாகவுள்ள அமீர் கானின் டங்கல்!

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான படம் - டங்கல்.

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 10:40 am

DIN

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியானது. வசூலில் நிறைய சாதனைகள் செய்தது. 

சமீபத்தில் பாகிஸ்தானில் டங்கல் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் அதில் உள்ள இந்திய தேசிய கீதம் பாடப்படும் காட்சி நீக்கப்படவேண்டும் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்க மறுத்தார் அமீர் கான். இதனால் அவருக்கு எந்த ஒரு நஷ்டமும் ஏற்படவில்லை. தற்போது டங்கல் படம் சீனாவில் திரையிடப்படுகிறது. மே 5-ம் தேதி நடைபெறுகிற படத்தின் முதல் காட்சியில் அமீர் கான் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சீனாவில் அமீர் கானின் த்ரீ இடியட்ஸ், தூம் 3, பிகே ஆகிய படங்கள் அதிகக் கவனம் பெற்றுள்ளன. இதில் பிகே படம் சீனாவில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமையைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.