அக்டோபரில் சமந்தா - நாக சைதன்யா திருமணம்?
சமந்தா கையில் தற்போது பல முக்கியமான படங்கள் உள்ளன.


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் வருகிற அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இருவரும் தங்கள் கையில் உள்ள படங்களை முடிப்பதில் மும்முரமாக உள்ளதாகவும் அறியப்படுகிறது.
சமந்தா கையில் தற்போது பல முக்கியமான படங்கள் உள்ளன. அட்லி - விஜய் படம், தியாகராஜன் குமாரராஜாவின் அநீதிக் கதைகள், விஷாலுடன் இரும்புத் திரை, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி, ராம் சரணுடன் தெலுங்குப் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...