ஃபெப்சி விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!
பெஃப்சி இல்லாத தொழிலாளர்களுடன் பணியாற்றும் முடிவில் தயாரிப்பளர்கள் சங்கம் உறுதியாக உள்ளது....


சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இதன் விளைவாக, ரஜினியின் 'காலா', விஜய்யின் 'மெர்சல்' உள்ளிட்ட 50 -க்கும் அதிகமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மூன்று நாள்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களில் நடந்து வந்து படப்பிடிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தயாரிப்பாளர் சங்கம் எடுத்த சில தன்னிச்சையான முடிவுகளால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் துறை ஆணையரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். மனு கொடுத்ததுமே தயாரிப்பாளர் சங்கத்துடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (ஆக. 4) இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. அதில், எங்களது கோரிக்கைளை நிறைவேற்றி தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்ளின் அறிவுறுத்தலின் பேரிலும், இந்த விவகாரம் குறித்து பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பேசி வருவதன் அடிப்படையிலும், வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்தார். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளதையடுத்து, ஃபெப்சி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை (ஆக 4) முதல் பணிக்குத் திரும்புவார்கள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெப்சி) தலவைர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பு, அரசு அதிகாரிகள் என முத்தரப்புப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஃப்சி இல்லாத தொழிலாளர்களுடன் பணியாற்றும் முடிவில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக உள்ளது. எனினும் பெஃப்சி சார்பில் இனி எந்த வேலை நிறுத்தமும் நடைபெறாது. ஒப்பந்தத்தின்படி ஊதியத்தை வழங்க வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ சம்பளம் பெறமாட்டோம். திரைப்படத்துறை ஆரோக்கியமாக இருக்க ஃபெப்சி அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று செல்வமணி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...