/

அசத்தும் சாகசக் காட்சிகள்: டிரெய்லரில் சாதனை படைத்துள்ள பெங்காலி படம்!

அமேஸான் காடுகளில் நிகழும் சாகசக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது...

News image
Updated On :9 டிசம்பர் 2017, 7:22 am

எழில்

அமேஸான் ஒபிஜான் என்கிற பெங்காலி பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெங்காலி பட டிரெய்லராக இருந்தாலும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அதன் பிரமாண்டம் சினிமா ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. அமேஸான் காடுகளில் நிகழும் சாகசக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜங்கிள்புக் படத்தை நினைவூட்டும் காடுகள் தொடர்பான காட்சிகளால் குழந்தைகள் இப்படத்தை ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கமலேஸ்வர் முகர்ஜி இயக்கத்தில் தேவ், ஸ்வேத்லனா, குலகோவா, டேவிட் ஜேம்ஸ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த டிரெய்லரைக் கண்ட பலரும் சமூகவலைத்தளங்களில் உடனடியாகப் பகிர்ந்ததால் முதல் 10 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. 

பெங்காலி, ஹிந்தி, தமிழ், ஒரியா, அஸ்ஸாமீஸ், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் முதல் பெங்காலி படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. தமிழில் அமேஸான் அட்வென்சர் என்கிற பெயரில் வெளிவரவுள்ளது. அதுமட்டுமல்லாமல், யூடியூப் தளத்தில் ஒரு வாரத்தில் ஒரு பெங்காலி பட டிரெய்லருக்கு அதிக பார்வைகள் கிடைத்த படம் என்கிற பெருமையையும் தற்போது பெற்றுள்ளது. இதுவரை 50 லட்சம் பார்வைகள் இந்த டிரெய்லருக்குக் கிடைத்துள்ளன. இத்தகவலை இப்படத்தைத் தயாரித்த பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வெளியாகும் டிசம்பர் 22 அன்று இந்தப் படமும் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.