அருவி மிக நல்ல படம்: இயக்குநர் ஷங்கர் பாராட்டு!
அருவி: மிக நல்ல படம். அனைவர் மற்றும் அனைத்து முகமூடிகளையும் விலக்கிக் காட்டுகிறது....


'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அருவி படத்தைப் பிரபல இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
அருவி: மிக நல்ல படம். அனைவர் மற்றும் அனைத்து முகமூடிகளையும் விலக்கிக் காட்டுகிறது. இயக்குநர் அருண் பிரபு, அதிதி பாலன் மற்றும் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...