என்னை மதிக்காத தமிழ்பட இயக்குனர்கள்: ராதிகா ஆப்தே அதிரடி புகார்
தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை என்று கபாலி திரைப்படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே புகார் கூறியுள்ளார்.


சென்னை: தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை என்று கபாலி திரைப்படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே புகார் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படத்தில் அவரது மனைவி குமுதவல்லி என்ற கதாதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் செய்தியாளர் ஒருவருக்கு அவர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்ததாவது:
தென் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு. அவர்களுக்கு மட்டும்தான் நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். நடிகைகள் என்றால் சாதாரண ஓட்டல் ரூம்தான்.
படப்பிடிப்புக்கு நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதே நேரம் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இது மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும். இதனால் நான் கடும் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.
நான் நடித்த ‘கபாலி’ படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. ரஜினியும் ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை நன்றாக நடத்தினார்கள். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை.
எனது சொந்த அனுபவத்தை வைத்தே இதை நான் கூறுகிறேன்.
இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...