கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டோலிவுட் ’பிக் பாஸ்’ என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்!

பிக் பாஸ் கான்செப்டில் என்னிடம் நான் தெரிந்து கொள்ள விரும்பும் அந்தரங்கம் என்னவென்று கேட்டால், நான் எனது மனைவியும் மகனும் நான் வீட்டிலில்லாத நேரத்தில் என்னை எப்படியெல்லாம் மிஸ் பண்ணுவார்கள்

News image
Updated On :11 ஜூலை 2017, 7:45 am

சரோஜினி

தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த மாதத்தில் இருந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இங்கே கமல் தொகுத்து வழங்கும் அதே நிகழ்ச்சியை தெலுங்குத் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்டார் மா தொலைக்காட்சிக்காக ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஜூலை 16 முதல் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தனது பங்கு என்னவாக இருக்கும் என ஜூனியர் என் டி ஆர் பேசுகையில், நகைச்சுவையாகக் கொஞ்சம் தனது சொந்தக் கவலையையும் பகிர்ந்து கொண்டார். 

அதாவது பிக் பாஸ் தொடருக்காக ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து பங்கேற்பாளர்களின் கோரிக்கைகள், புகார்களை செவி மடுத்து அவர்களுக்கு தீர்வு அளிக்க வேண்டும் அதோடு... நிகழ்ச்சியின் விதிகளை மீறும் பங்கேற்பாளர்களையும், பப்ளிக் ஓட்டிங் முறையில் போட்டியிலிருந்து வெளியேற்றப்படவிருக்கும் பங்கேற்பாளர்களைப் பற்றியும் தான் அறிவிக்க வேண்டும். இது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எனது பங்கு என்று தெரிவித்தார்.

மேலும்; அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள நினைப்பது தவறென்றாலும் கூட மனித இயல்பு அதற்குத் தான் ஆசைப்படுகிறது... சொல்லப்போனால் நான் கூட... எனது வீட்டில், நான் இல்லாத நேரத்தில் என் மனைவியும், மகனும் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார் நகைச்சுவையாக; ஏனெனில் முன்பெல்லாம் என் மகன் பேசத்தொடங்கிய போது; யார் கேட்டாலும் நான் அப்பாவுக்காகப் பிறந்திருக்கிறேன்.. என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்தான். இப்போது படப்பிடிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று நான் வீட்டிலிருக்கும் நேரம் குறையக் குறைய என் மகன் என்னை விட்டு விலகிப் போய் விட்டானோ என்று நினைக்கத் தோன்றுகிறது எனக்கு. அவனிடம் இப்போது போய் கேட்டால், நான் என் அம்மாவுக்காகத் தான் பிறந்திருக்கிறேன் என்று கூறுவானாக இருக்கும்.

ஆகவே பிக் பாஸ் கான்செப்டில் என்னிடம் நான் தெரிந்து கொள்ள விரும்பும் அந்தரங்கம் என்னவென்று கேட்டால், நான் எனது மனைவியும் மகனும் நான் வீட்டிலில்லாத நேரத்தில் என்னை எப்படியெல்லாம் மிஸ் பண்ணுவார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியாமல் அறிந்து கொள்ள விரும்புகிறேன், என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.