நடிக்க வந்து 9 ஆண்டுகளாகி விட்டன. இப்போதெல்லாம் சுவிஸ் பாடல்காட்சிகளில் டான்ஸ் ஆடும் ஹீரோயினாக நடிப்பதில் இருந்த எனது ஆர்வங்கள் குறைந்து விட்டன. அதற்காக அப்படி நடிக்க எனக்கு போர் அடிக்கிறது என்று அர்த்தமில்லை. அதில் பெரிய ஆர்வமெதுவும் இப்போது எனக்கு இல்லை என்று அர்த்தம். எனவே எனக்குள்ளிருக்கும் கலையை திருப்திப்படுத்தாத எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இனிமேல் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன் நான்.
இது வரை நான் நடித்த படங்களில் எனது நடிப்புத் திறனுக்கு சவால் விடும் வேடங்கள் எதையும் நான் நடித்திருக்கவில்லை என்றாலும் கூட நடித்தவரையில் என் வேலையை நான் நல்லபடியாகவே முடித்து நடிப்பைப் பொறுத்த வரையில் என்னிடம் குறை காண முடியாத அளவுக்கே இருந்திருப்பதாக நம்புகிறேன். வெளிநாட்டு நடிகர்களைப் போல நடிப்புத்திறமையை பல்வேறு மாறுபட்ட விதமாக வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இங்கே தென்னிந்தியாவில் மிகவும் குறைவு. அப்படியான ஸ்டீரியோ டைப் வேடங்களில் இருந்து மீண்டு பல்வேறு விதமான நடிப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை இங்கும் உண்டாக்கினால் நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் ஒவ்வொரு படத்திலும் ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்த பல நடிகர்கள் விரும்புவதில்லை.
வாய்ப்புகள் அப்படி அமையும் பட்சத்தில் நடிகர்கள் தைரியமாக இயக்குனரிடம் சென்று ‘தங்களால் படத்துக்குப் படம் மாறுபட்ட நடிப்பை வழங்கி கமர்சியலாகவும் வெற்றி பெற முடியும்’ என்று அவரை கன்வின்ஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இங்கும் அப்படி ஒரு ஆரோக்கியமான நிலை வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். என்று தனது நடிப்பு மற்றும் இன்றைய சினிமா குறித்த மனநிலையை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
Related Article
தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்தார் நாகார்ஜுனா!
நடிகை பாவனா விவகாரத்தில் பெண்ணுக்குப் பெண்ணே தான் எதிரியா? மேலும் பல பிரபலங்கள் கைதாக வாய்ப்பு!
ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ டீஸர் வெளியீடு!
ஸ்ரீதேவியின் 'மாம்' என்ன மாதிரியான படம்?!
சீதையா நடிச்சாச்சு இப்போ திரெளபதியாவும் நடிக்கப் போறாங்களாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



