கைதாவதைப் பற்றி கவலையில்லை: பிக் பாஸ் சர்ச்சை குறித்து கமல் பேட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலைக் கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி மனு...
கைதாவதைப் பற்றி கவலையில்லை: பிக் பாஸ் சர்ச்சை குறித்து கமல் பேட்டி!

கமல் நடத்தும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்க சிவா மனு அளித்துள்ளார். இது குறித்து கமல் தன்னுடைய பதிலை அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: எவ்வித தொடர்பும் இல்லாத ஏழு ஆண்களும் ஏழு பெண்களும் கலந்துகொண்டு ஆபாசமாகப் பேசியும் 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியைப் பார்த்து வரும் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்கச் செய்யும். 

தமிழர்கள் உயிரை விட மேலாக மதித்துப் போற்றும் தமிழ் தாய் வாழ்த்தைக்கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலையும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்து தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டைக் காப்பாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 

கைதாவதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எவ்வளவு மலினமானது! கிரிக்கெட் போட்டியின்போது நடனம் ஆடுகிறார்கள். அவர்களைக் கைது செய்யவேண்டாமா? சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்கும்போது சியர்லீடர்ஸ் நடனமாடுகிறார்களே? என்னைத் தவறாக எண்ணிக்கொண்டுள்ளார்கள். நான் ஒரு கம்யூனிஸ்ட் என இந்துத்வா அமைப்புகள் தவறாக எண்ணுகின்றன. நான் ஒரு பகுத்தறிவாளன். உலக நடப்புடன் ஒத்துப்போகும் எந்தத் தரப்பையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com