தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

யாராலும் வீழ்த்த முடியாது! ஓவியா ரிட்டர்ன்ஸ் பிக் பாஸ்!

ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக பேசி அதை வைரலாக்கிவிடுவது நெட்டிசன்களின் இயல்பு

News image
Updated On :23 ஜூலை 2017, 7:41 am

DIN

ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக பேசி அதை வைரலாக்கிவிடுவது நெட்டிசன்களின் இயல்பு. ஒரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டிக் கொண்டே பார்ப்பவர்கள் உள்ளனர். இன்னொரு புறம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏதோ தங்கள் வீட்டில் நடப்பதைப் போல, சுவாரஸ்யமான ஒரு சீரியலைப் பார்ப்பதைப் போல பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் நபர் வெளியேற்றுப்பட்டுவிடக் கூடாது என்று வோட்டுப் போட்டு காப்பாற்றி வரும் அளவுக்கு இந்நிகழ்ச்சியை சீரியஸாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி பலவிதமான ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக ரசிகர்களின் மனத்தை முழுவதும் ஆக்கிரமித்தவர் ஓவியா. சனிக்கிழமையன்று ஒளிப்பரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் முகமூடி கிழிந்து ஓவியா உண்மையானவர் என்று குறும்படம் போட்டு நிரூபித்தார் கமல். தவிர பார்வையாளர்களிடமிருந்து ஓவியாவுக்கு கிடைத்த அதிக வோட்டுகளால் எலிமினேஷனிலிருந்தும் தப்பித்துவிட்டார். இதுவே ஓவியாவின் ரசிகர்களின் வீட் எண்ட் கொண்டாட்டம்.

Story image

சினிமா  பிரபலங்களின் புகைப்படங்கள் பதித்த டீ ஷர்ட், காபி மக், நோட்டுப் புத்தகம், கீ செயின் ஆகிய பொருட்களை விற்பனை செய்யும் கடையான ஃபுல்லி ஃபில்மி (Fully Filmy) சமீபத்தில் ஒரு டீ ஷர்ட்டை அறிமுகம் செய்துள்ளது. அதில் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க 'Neenga Shut up Pannunga’ என்ற வாசகம் உடைய டீ ஷர்ட்டை ஆன் லைனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இதன் விலை 499. அந்தளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு ஆதரவு அலைகள் எழுந்துள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கும் அளவிற்கு ஓவியா ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக், டிவிட்டர்களில் நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருவது நிகழ்ச்சியின் வெற்றியே. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் பலருக்கும் ஓவியா இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். `ஓவியா ஆர்மி' `ஓவியன்ஸ்',   `நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்கிற பெயர்களில் ஃபேஸ்புக் பக்கங்களில் ஓவியாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.

நான்: ஓவியா ஆர்மி ன்னு பேஜ் இருக்காமே
நாகராஜ்: அண்ணா, ஓவியா நேவி, ஓவியா ஏர்போர்ஸ் ன்னும் இருக்கு..

- ரகுநாத் ரத்னம்

***

நீ நீயாகவே இருப்பதுதான் உன் பலம் ஓவியா. அவர்கள் பேசினால் பேசட்டும். ஒவ்வொருவராக காணாமல் போவார்கள். Love you Oviya. #BiggBoss. #பிக்பாஸ். 
- கல்கி சுப்ரமணியம்

***

Haaa... Oviya... Oviya...  Oviya...  Need to learn how strong women should be.. yarum illathapothum Manam thalarala.. Aaii podeeee.... Love u loads  Oviya Helen
-Esvari Vcs

***

Story image

ஓவியா நேஷன் என்ற ஃபேஸ்புக் பதிவிலிருந்து சில 

#SaveOviya you Just shut up என்று சொல்லாமல் நீங்க Shut up பண்ணுங்க என்று மரியாதையாக சொன்ன தேவதை அவள்
#oviyanation

***

ஆரவோட Romance
பை பரணி சொல்லி Sentiment
காயத்ரிய பன்னி சொல்லி Comedy
சக்தி கூட Action
தன்னம்பிக்கை Message
#Oviya One Women Show ❤

***

"என்ன யாரு சப்போர்ட் பண்றாங்களோ இல்லையோ நான் என்னை நல்லா சப்போர்ட் பண்றேன்" யாரு என்ன பேசுனாலும் சோறு தான் முக்கியம்
ஓவியா டா :)

***

அங்க இருந்த 100 ஆடியன்ஸ் கை தட்டுனதுக்கே ஓவியாக்கு அவ்ளோ சந்தோசம். வெளிய வந்து மக்கள் ஆதரவ பாத்தா? #OviyaArmy

***

ஓவியா 100 தேவசேனாவிற்கு சமம், அதுவும் எந்த பல்வாழ்தேவனாலும் வீழ்த்த முடியா தேவசேனா அவள்.

**

இனிமே தேசிய விலங்கு Fish da. 
பிடிச்ச குழம்பு மீன் குழம்பு
பிடிச்ச வார்த்தை ‘பிஷ் யூ’ - தகிட தக திமி #ஓவியா அர்மி

***

Story image

ஓவியாவிடம் பிடித்த பத்து விஷயங்கள் என்று மீம்ஸ் போட்டும் மகிழ்கின்றனர் நெட்டிசன்கள்!

  • வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் புன்னகையுடன் எதிர்கொள்பவர் ஓவியா. 
  • துரோகங்களை  ஓர் அலட்சியப் புன்னகையுடன் கடந்து செல்பவர் ஓவியா. 
  • தனிமைப்படுத்தியபோதும் தெளிவாக துரோகிகளை ஒற்றை ஆளாக எதிர்கொள்ளும் ஓவியா, 
  • மற்றவர்களின் பிரச்னையை உணர்ந்து அவர்கள் காயப்பட்டு கலங்கும் போது ஆத்மார்த்தமான அன்புடன் ஆறுதல் சொல்லும் ஓவியா சுயமரியாதையை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காத ஓவியா
  • எந்தச் சூழலிலும் மனம் தளராத ஓவியா
  • பெண்களின் மன உறுதிக்கும் விடாப் பிடியான குணத்துக்கும் உதாரணமாக திகழும் ஓவியா
  • உற்சாகத்துடன் எப்போதும் வளைய வருபவர் ஓவியா
  • ஒருபோதும் மற்றவர்கள் பற்றி புறம் பேசாதவர் ஓவியா
  • தன்னுடைய தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு அதற்கு மன்னிப்புக் கேட்கத் தயங்காதவர் ஓவியா

இப்படி பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய இருப்பை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்ட ஓவியா, இறுதிவரை அதில் நீடித்து ஜெயிக்க வேண்டும் என்பதே இந்த ஓவியன்களின் பிரார்த்தனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.