விஜய் சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்' விரைவில் வெளிவருகிறது!
இடம்.பொருள் ஏவல் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்த ஆடிக்காற்றில் தலையசைக்கும்...


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள படம் - இடம் பொருள் ஏவல். யுவன் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இந்தப் படம் நீண்ட நாளாக வெளிவராமல் உள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்த படம் இது.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவலை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இடம்.பொருள் ஏவல் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்த ஆடிக்காற்றில் தலையசைக்கும் தென்னங்கீற்றாக மனம் என்று கூறியுள்ளார்.
தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களுக்குப் பிறகு மாமனிதன் என்கிற தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் சீனு ராமசாமியுடன் மீண்டும் இணையவுள்ளார் விஜய் சேதுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...