/

ஓவியா வெளியே வந்துவிடு: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கமான பதிவு!

அவர் அழுவதை என்னால் காணமுடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக...

News image
Updated On :26 ஜூலை 2017, 7:27 am

எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் மிகவும் புகழடைந்துள்ளன. 

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் இதர பெண்களுக்கும் இடையே பெரிய அளவில் மோதல்கள் நடைபெற்றன.  இதனால் பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள்  ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதப்படுகின்றன. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

ஓவியாவுக்கு ஆதரவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் எழுதியதாவது: 

ஓவியா தயவுசெய்து வெளியே வந்துவிடு. ஒட்டுமொத்த தமிழ்நாடும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்களை வரவேற்கக் காத்துக்கொண்டிருக்கிறது. அவர் அழுவதை என்னால் காணமுடியவில்லை என்று எழுதியுள்ளார்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஜூலி இடையே மோதல் நடைபெற்றது. இதைப் பற்றியும் ஐஸ்வர்யா ட்விட்டரில் எழுதியதாவது: ஜூலி மோசம், ஜூலிக்கு ஆஸ்கர் வழங்கலாம், ஓவியா.. அடி மா நீ அவள ஜூலியை என்று ஓவியாவுக்கு ஆதரவாகவும் ஜூலிக்கு எதிராகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.