அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரபல நடிகை கடத்தல் விவகாரம்: நடிகருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக, மலையாள முன்னணி நடிகர் திலீபுக்கு மிரட்டல் கடிதம் வந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2017, 7:32 am

DIN

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக, மலையாள முன்னணி நடிகர் திலீபுக்கு மிரட்டல் கடிதம் வந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திரும்பும் பொழுது, அவரது காரை ஒரு கும்பல் வழி மறித்தது. அவரது காரை மறித்து ஏறிக் கொண்ட அந்த மர்ம நபர்கள், காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக பாவனா போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திய  போலீசார்,   பாவனாவின் கார் டிரைவர் மற்றும் கூலிப்படையினர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சுனில் என்ற பல்சர் சுனில் என தெரிய வந்தது. இவர் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது  அவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் பொழுது பாவனாவிடம் பணம் பறிக்கவே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சுனில் கூறினார்.

ஆனால் பாவனா கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், முன்பகை காரணமாக  மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதனை திலீப் மறுத்தார்.

தற்பொழுது நடிகர் திலீப் கேரள போலீஸ் டி.ஜி.பி.யை நேற்று சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.அதில், பாவனா வழக்கீழ் சிறையில் இருக்கும் பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார் என்றும், அவரது நண்பர் எனக்கூறி விஷ்ணு என்பவர் தனக்கு போன் செய்து ரூ.1½ கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கூறி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து திலீப்புக்கு காக்கநாடு சப்-ஜெயிலில் இருந்து பல்சர் சுனில் எழுதியதாக கூறப்படும் கடிதமானது சமூக ஊடகங்களில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் இப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வழக்கை நடத்தவும், மற்ற செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே எனக்கு உடனே பணம் தரவும். அந்த பணத்தை இந்த கடிதம் கொண்டு வரும் நண்பன் விஷ்ணுவிடம் கொடுக்க வேண்டும். இந்த கடிதம் கொண்டு வரும் நண்பருக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது.

எனவே நீங்களும் அவரிடம் எதுவும் பேச வேண்டாம். பணத்தை மட்டும் கொடுத்து விடவும். இந்த வழக்கில் உங்களது பெயரை கூறுமாறு மலையாள நடிகர், ஒரு நடிகை மற்றும் டைரக்டர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வலியறுத்தி வருகிறார்கள். ஆனால் நான், உங்களின் நம்பிக்கைக்கு உரியவன். எனவே நான் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படியே எப்போதும் இருப்பேன் என்று கூற முடியாது. உங்கள் முடிவு உடனே தெரியாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். தங்களின் விசுவாசமுள்ள பல்சர் சுனில் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது வெளியாகியுள்ள கடிதத்தால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.