விஷால் அடுத்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகும். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி தற்போது அவர் ஒரு டாக்டராக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

படத்தின் இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் விஷாலுடைய தோற்றம் வித்தியாசமாக உள்ளது. தாடி வைத்து கண்ணாடி அணிந்த ஒரு கெட்டப்பில் காணப்படுகிறார். இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். அதில் விஷாலின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நடிகர் விஷாலும் மோகன்லாலுடன் நடிப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுதான். இந்த படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்ஷிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


