/

நடிகர் அபிஷேக் பச்சன் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தாரா?

அபிஷேக் பச்சன் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பிக்க வாய்ப்புண்டா?

News image
Updated On :4 மே 2017, 10:25 am

DIN

அமிதாப் பச்சன் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பிக்க வாய்ப்புண்டா? பல நூறு கோடிகளுக்கு அதிபர் அல்லவா அவர்!

ஆனால் மத்திய பணியாளர் தேர்வாணையம் இணையத்தளத்தில் ஜூனியர் அளவிலான பணிக்காக விண்ணப்பித்தோர் பட்டியலில் அபிஷேக் பச்சனின் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றது!

எதனால் இதுபோல ஆனது? என்ன காரணத்துக்காக அபிஷேக் பச்சனின் விண்ணப்பம் உருவாக்கப்பட்டது என்கிற கேள்விகள் இதனைத் தொடர்ந்து உருவாகின. அதேசமயம், ஏப்ரல் 30-ம் தேதி இடம்பெற்ற தேர்வில் அபிஷேக் பச்சன் கலந்துகொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்!

Story image

இந்நிலையில் இதுகுறித்த குழப்பத்துக்குப் பதில் கிடைத்துள்ளது. இது யாரோ சிலர் செய்த விளையாட்டு, மற்றபடி இதற்கும் ஆணையத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என மத்திய பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.