/

மே 30ஆம் தேதி ரங்கூன் இசை வெளியீடு

மிகக் குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, எல்லா

News image
Updated On :27 மே 2017, 9:14 am

DIN

மிகக் குறைந்த காலத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது 'ரங்கூன்’ படத்தின் ட்ரைலர். மும்பையைச் சேர்ந்த கதாநாயகி சனா மகபூல் தனது தோற்றப் பொலிவால் ரசிகர்களின் மனத்தை வெகுவாக கவர்ந்து விட்டார் எனச் சொல்லலாம். 

Story image

பர்மாவில் இதுவரை யாரும் படம்பிடிக்காத இடங்களில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி (இயக்குனர் முருகதாசின் உதவியாளர்) சிரத்தை எடுத்துப் படம்பிடித்ததுள்ளார்.

அனிருத்தின் குரல் வளத்தில் foreign return என்கிற பாடல் ஏற்கனவே ஹிட். அடுத்தாக இன்று வெளிவர உள்ள விஷால் சந்திரசேகர் பாடல்களும் ரசிகர்கள் மனதை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எங்கேயும் எப்போதும், ராஜா ராணி ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தனி முத்திரை பதித்த fox star ஸ்டுடியோஸ், இயக்குனர் முருகதாஸின் கூட்டணி 'ரங்கூன்' படம் மூலம் மீண்டும் வெற்றி அடைவது நிச்சயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.