சென்னை: நேற்று அறிவிக்கப்பட்ட ஆந்திர அரசின் சிறப்பு சினிமா விருதுகளைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2016-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் திரைப்பட உலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரும், மறைந்த அம்மாநில முதல்வரான என்.டி.ராமராவ் பெயரில் ‘என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள்’ வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வரிசையில் 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந் இருவருக்கும் அறிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நடிகர் கமல் விருது பெற்றமைக்காக ரஜினியை வாழ்த்தும் பொருட்டு, 'என்.டி.ஆர் தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் மரியாதை செய்ததற்காக ஆந்திராவுக்கு நன்றி. மீண்டும் ஒரு முறை இது நடந்துள்ளது. எனது சினிமா வாழ்வின் துவக்கத்திலிருந்து தொடரும் உங்களது ஆதரவுக்கு மனப்பூர்வமாக நன்றிக்கடன் பட்டுளேன்.' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கு உடனடியாக நடிகர் ரஜினிகாந்த், 'நன்றி கமல்..உங்களையும் வாழ்த்துகிறேன்.வாழ்த்துகள்' என்று பதில் தெரிவித்திருந்தார்.

தலைமுறைகளைத் தாண்டியும் தொடரும் இந்த இருவரின் நட்பானது அவர்தம் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


