எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கார்த்திக் & கெளதம் கார்த்திக் அப்பா மகனாக நடிக்கும் புதிய படம்!

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய

News image
Updated On :1 அக்டோபர் 2017, 7:08 am

DIN

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய திருவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக். 

படத்தில் அப்பா மகனாகவே இவர்கள் தோன்றவிருக்கிறார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயினர் பட நிறுவனம் தயாரிப்பில் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது.

Story image

இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறியது, ‘இந்தப் படம் அப்பா மகன் சார்ந்தது. ஃபேமிலி டிராமா ஆக்‌ஷன் ஜானர் படம்தான். இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் இருக்கும். படத்தில் அப்பா கார்த்திக் அரசாங்கப் பணியாளராக நடிக்கிறார். மகன் கெளதம் ஒரு பாக்ஸர். படத்தில் அப்பா மகன் என்றாலும் நண்பர்கள் போல பழகக் கூடியவர்கள். அதற்குக் கச்சிதமாக பொருந்தக் கூடியவர்கள் கார்த்திக் சார் மற்றும் கெளதம்’ என்றார் திரு.

கார்த்திக்கு ஜோடியாக் பிரபல ஹீரோயினை பேசி வருகிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மற்ற கதாபாத்திரத் தேர்வும் நடந்து வருகிறது. கார்த்திக் 'தானா சேர்ந்த கூட்டம்’படத்துக்குப் பிறகு நடிக்கும் படம் இது. இப்பட அறிவிப்பை கெளதம் கார்த்திக் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.