எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கார்த்திக்-கௌதம் இணையும் படத்தின் தலைப்பு வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2017, 1:50 pm

DIN

கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய 'திரு' இப்படத்தை இயக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தில் அப்பா மகனாகவே இவர்கள் தோன்றவிருக்கிறார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயினர் பட நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதில், நடிகைகளாக ரஜீனா கஸன்ட்ரா, வரலட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை இத்திரைப்படத்தின் இயக்குநர் திரு ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதன்படி 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. இந்த தலைப்பை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்து 1986-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மௌனராகம். அதில் வரும் ஒரு காட்சியில் தனது காதலியான ரேவதியின் தந்தையை 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று கார்த்திக் அழைப்பது மிகவும் பிரபலமானதாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.