தீபாவளிக்கு வெளிவருகிறது 'மேயாத மான்'!
நவம்பர் 17 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட மேயாத மான் படம் தீபாவளி அன்று வெளிவரவுள்ளது...


நவம்பர் 17 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட மேயாத மான் படம் தீபாவளி அன்று வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மேயாத மான் படத்தில் வைபவ், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார்.
கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சித் தொடர் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மேயாத மான் படம், அக்டோபர் 18 அன்று வெளிவரவுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவந்த ப்ரியா, தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...