/

மெர்சலுக்குப் பின் அட்லியின் அடுத்த படத்திலும் விஜய் நடிக்கிறாரா?

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் மெர்சல் படத்தில் பல சிறப்புக்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:53 pm

DIN

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் மெர்சல் படத்தில் பல சிறப்புக்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. மூன்று வேடங்களில் விஜய் கலக்கியிருக்கும் ஆக்‌ஷன், காதல், பாசம் என கலந்து கட்டி கமர்ஷியல் ஸ்பெஷலாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ரியல் தீபாவளி ட்ரீட். படத்தின் இடைவேளைக்குப் பின் சில காட்சிகள் மிரட்டலாகவும், இப்படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்கிறார்கள் படக்குழுவினர்.
 
தெறி, மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லி விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படத்தில் பணி புரிய இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அந்த படத்தின் பெயர் 'ஆளப்போறான் தமிழன்' என்கிறது அட்லி வட்டாரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.