ரஜினி நடிக்காவிட்டால் 2.0 வில் அமீர் கான் நடித்திருப்பாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில்
ரஜினி நடிக்காவிட்டால் 2.0 வில் அமீர் கான் நடித்திருப்பாரா?
Updated on
2 min read

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தை லைகா 400 கோடி ருபாய் முதலீடு செய்து தயாரித்து வருகிறது.  

எந்திரன் படத்தில் ரஜினியின் அபார நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஷங்கர் இதன் இரண்டாம் பகுதியான 2.0-வைப் பற்றி ரஜினியிடம் கேட்டபோது தன் உடல்நலம் கருதி, அமீர் கானை நடிக்கக் கேட்கலாம் என்று கூறியிருக்கிறார். ஷங்கரும் இப்படத்துக்காக அமீர் கானை அணுகினாராம். சூப்பர் ஸ்டாரும் அமீருக்கு ஃபோன் செய்துள்ளார். படத்தின் கதையைக் கேட்ட அமீர் இது நிச்சயம் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெறும் என்றும், இது வரைக்கும் இல்லாத சூப்பர் டூப்பர் வெற்றி உறுதி என்றும் ஷங்கரிடம் கூறியுள்ளார். ஆனாலும் இந்தப் படத்தில் தன்னால் நடிக்க இயலாது, காரணம் ரஜினியை தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரல் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் கூறி நடிக்க மறுத்து விட்டாராம் அமீர் கான்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்படம் குறித்துப் பேசினார் அமீர் கான். 'நான் ரஜினி சார் மற்றும் ஷங்கரின் பெரிய ரசிகன். இந்தப் படத்தின் கதையை ஷங்கர் என்னிடம் கூறிய போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தின் முதல் பகுதியை நான் பார்த்துள்ளேன். படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இரண்டாம் பகுதியில் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் கேட்டபோது என்னால் அது முடியும் என்று தோன்றவில்லை.

நான் கண்ணை மூடி ஒரு கணம் அந்தக் கதாபாத்திரத்தில் என்னை நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு சீனிலும் ரஜினி தான் தெரிகிறார். அந்த அளவுக்கு படத்தின் முதல் பகுதியில் அவர் தனக்கான பாத்திரத்தை செதுக்கி நடித்திருப்பார். அதனால் அவர் தான் நடிக்க வேண்டும் என ஷங்கரிடம் கூறினேன். இந்தப் படம் எல்லா மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றி அடையும்’ என்று கூறினார் அமீர் கான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com