சென்னையில் ஷாப்பிங் மால் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் நடிகை ஓவியா!
சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய ஃபேமிலி ஷாப்பிங் மால் வருகிற திங்கள் அன்று திறக்கப்படவுள்ளது...


சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய ஃபேமிலி ஷாப்பிங் மால் வருகிற திங்கள் அன்று திறக்கப்படவுள்ளது. இதன் தொடக்க விழாவில் பிக் பாஸ் மூலம் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் அவர் சரவணா ஸ்டோர்ஸின் புதிய விளம்பரத்திலும் இடம்பெற்றுள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் இன்றைய விளம்பரங்கள் வழியாக இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஓவியாவை நேரில் காண ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. சமூகவலைத்தளங்களில் சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின. தமிழ்த் திரையுலகினரும் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இதனால் ஓவியாவுக்குத் திரையுலகிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...