இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கேலி செய்கிறார் என ஆரம்பத்தில் எண்ணினோம்: டி.ஆர். - தன்ஷிகா விவகாரம் குறித்து வெங்கட் பிரபு விளக்கம்!

News image
Updated On :30 செப்டம்பர் 2017, 7:12 am

எழில்

எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

 இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டி.ராஜேந்தர், தன்ஷிகாவும் பங்கேற்றனர்.
 நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இதையடுத்து பேச வந்த டி.ராஜேந்தர் தன்னுடைய அடுக்கு மொழியில் சபை நாகரீகம் தெரியவில்லை என நடிகை தன்ஷிகா குறித்து பேச மேடையிலேயே தன்ஷிகா சிறிது நேரம் கண் கலங்கினார். இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகிலும் சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தன்ஷிகாவைக் கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடையில் பேசும் போது ஒருவரின் பெயரை மறப்பது இயல்பான விஷயம், தன்ஷிகா டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்ததில் எந்த உள் நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பிறகும் டி.ராஜேந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தன்ஷிகாவைத் தொடர்ந்து கண்டித்ததை டி.ராஜேந்தர் தவிர்த்திருக்கலாம் என நடிகர் விஷால் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று சம்பவத்தின்போது மேடையில் இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாவது: எந்த ஒரு சமயத்திலும் பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். அங்கிள் டி.ஆர். தனது எண்ணங்களை விழித்திரு விழாவில் சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் இதை ஒரு கேலியாகவே எண்ணினோம். ஆனால், அதன்பிறகு மிகவும் தீவிரமாகிவிட்டது. அப்போது என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை. திரைத்துறையில் புதிதாக நுழைந்துள்ள தன்ஷிகா, பொது மேடைகளில் பேசிப் பழக்கம் இல்லாதவர். இந்த விஷயத்தில் நம்மைப் போன்ற மூத்தவர்கள் அவருக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். வழிகாட்டுதல் என்பது கடவுளின் பணியாகும். யாரும் கடுமையாக விமரிசிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களைக் காயப்படுத்துதல் மூலம் நான் எதையும் பெறப்போவதில்லை. மிகவும் மரியாதையுடனே நான் இதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.