இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியன் 2 படத்தில் இணையும் கமல் & ஷங்கர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

21 வருடங்களுக்குப் பிறகு, இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள்...

News image
Updated On :30 செப்டம்பர் 2017, 9:13 am

எழில்

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த படம் - இந்தியன். சுதந்தரப் போராட்டத் தியாகி, லஞ்சத்தை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தின் மையக்கருவாக அமைந்தன. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள். 

இந்தியன் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். சிறந்த கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக வெங்கிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் இந்தப் படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதன்பிறகு கமலும் ஷங்கரும் இணையும் சூழல் வந்தபோதும் அது நிறைவேறாத நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு இருவரும் கைகோத்துள்ளார்கள். தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு, இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. 

இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஆகியோருடன் இணைந்து இந்த அறிவிப்பை கமல் வெளியிடவுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.