நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோலமாவு கோகிலாவான நயன்தாரா!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோலமாவு கோகிலா என்று பெயரிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2017, 8:33 pm IST

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோலமாவு கோகிலா என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்திருக்கும்  `வேலைக்காரன்' படமானது வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா தற்பொழுது ஒப்பந்தமாகி இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்கும் இந்தப் படமானது முழுக்க காமெடி படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணிகளையும் இப்படத்திற்கு மேற்கொள்ள இருக்கின்றனர். சண்டைக் கலைஞராக மகேஷும், கலை இயக்குநராக அமரனும், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தனும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படம் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோவை இன்று சமூக வலை  தளங்களில் வெளியிட்டார். படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.