இன்னும் பெயரிடப்படாத இருமொழிப் படமொன்றின் (பைலிங்குவல்) மூலமாக தெலுங்கு ஹாட் ஸ்டார் அல்லு அர்ஜூன் தமிழ் பேசவிருக்கிறாராம். அதாவது நேரடித் தமிழ்ப் படமொன்றின் மூலமாகத் தனக்கிருக்கும் தமிழ் ரசிகர்களை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் அக்கட பூமியின் அதிரடி ஸ்டார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனை இயக்கவிருப்பது இயக்குனர் லிங்குசாமி!
முன்னதாக இயக்குனர் லிங்குசாமி, சூர்யா, சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான ‘ அஞ்சான்’ படத்தை தெலுங்கில், ‘சூர்யா’ஸ் சிக்கந்தர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு டோலிவுட்டில் தனது புது வருகையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோக்கள் இருவரை மையமாக வைத்து லிங்குசாமி இயக்கத்தில் இருமொழிப் படமொன்று வெளிவரவிருப்பதாகவும், அதில் ஒரு நாயகன் அல்லு அர்ஜூன் எனவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இன்னமும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் லிங்குசாமி தரப்பிலிருந்தோ அல்லது அல்லு அர்ஜூன் தரப்பிலிருந்தோ வெளிவரவில்லை. கூடிய விரைவில் வெளிவரும் என்கிறது டோலிவுட் செய்திகள்.
தற்போது, வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான, ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ (என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா) படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால் அதன் படப்பிடிப்புகளில் அல்லு அர்ஜூன் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
Related Article
இனி நான் தனி ஆள் இல்லை: நடிகை தன்ஷிகா உருக்கம்!
தெலுங்கு பிக் பாஸ்: போட்டியை வென்று ரூ. 50 லட்சம் தட்டிச்சென்ற நடிகர் சிவ பாலாஜி!
ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவ குசா படத்துக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல வசூல்!
சீக்கிரமே பெரியம்மாவாகப் போகிறார் காஜல் அகர்வால்!
காதலருடன் இலியானாவின் அதிரடி புகைப்படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


