/

கனா படத்தில் நான்கு வயது மகளுடன் இணைந்து பாடிய சிவகார்த்திகேயன்!

கனா படத்தில் இடம்பெறும் தந்தை - மகள் சம்பந்தப்பட்ட வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து...

News image
Updated On :22 ஆகஸ்ட் 2018, 6:47 am

எழில்

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.

இந்நிலையில் கனா படத்தில் இடம்பெறும் தந்தை - மகள் சம்பந்தப்பட்ட வாயாடி பெத்த புள்ள என்கிற பாடலை வைக்கம் விஜயலட்சுமியுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவருடைய நான்கு வயது மகள் ஆராதனாவும்  பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை ஜிகேபி எழுதியுள்ளார். ஆராதனா பாடியுள்ள முதல் பாடல் இது. இதனால் இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

கனா பாடல்கள் நாளை வெளியிடப்படுகின்றன.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.