ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் தி அயர்ன் லேடி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தி அயர்ன் லேடி (The Iron Lady) என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா ஜெயலலிதா பிறந்தநாளன்று (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. இந்நிலையில் மறைந்த தினமான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிப்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

