சிம்பு, ஓவியா இணையும் 90ml படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

புத்தாண்டு பரிசாக சிம்புவின் இசையில் ஓவியா பாடிய மரண மட்டை பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிம்பு, ஓவியா இணையும் 90ml படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Updated on
1 min read

புத்தாண்டு பரிசாக சிம்புவின் இசையில் ஓவியா பாடிய மரண மட்டை பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனர். 

அனிதா உதீப் இயக்கவுள்ள 90ml என்ற அந்தப் படத்தில் ஓவியா நடிக்கிறார். நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார் சிம்பு. இதற்கு முன்னால் நடிகர் சந்தானத்தின் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைத்திருந்தார் சிம்பு. 

சிம்பு ஹீரோவாக நடிக்கிறாரா என்று கேட்டதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து மறுப்பு வந்தது. இந்த படம் ஒரு லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வித்யாசமான கதையம்சத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com