காதலர் தினத்தினை முன்னிட்டு, விரைவில் வெளியாகவுள்ள "ஒரு அதார் லவ்' என்ற மலையாள படத்திற்காக எடுக்கபட்ட 'மாணிக்ய மலரேயா பூவி' என்ற பாடல் கடந்த பிப்ரவரி 9 அன்று யுடியூபில் வெளியானது. அதில் நடித்துள்ள 18 வயதேயான இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் கண் அசைவுகள் மற்றும் முக பாவங்கள் அந்த விடியோவைப் பார்த்த அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. உடனடியாக இந்த விடியோ நாடு முழுவதும் வைரலாக பரவத் தொடங்கியது.

பிரியா வாரியருக்கு அதன் பின் ஒரு புதிய இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். அது ஒரே நாளில் 25 லட்ச பார்வையாளர்களைப் பெற்று சாதனை செய்தது. மேலும் கூகுள் தேடலில் இதுவரை இந்தியாவில் சன்னி லியோன் தான் பல ஆண்டுகளாக டாப் லிஸ்ட்டில் இருந்து வந்தார்.

தற்போது இதை முறியடிக்கும் விதமாக பிரியா பிரகாஷ் வாரியரின் பெயர் நாடு முழுவதும் தேடப்பட்டு வருகிறது. அவருடைய பெயரும் 'மாணிக்ய மலரேயா பூவி' விடியோவும் அதிகளவு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஒரு அழகான விழி அசைவும், புருவ நெறித்தலும், மென் சிரிப்பும், வெட்கத்துக்கும் இத்தனை மகிமையா என்று வியக்கிறார்கள் இளைஞர்கள்.
ப்ரியாவுக்கு கேரளாவிலுள்ள திருச்சூர் சொந்த ஊராகும். இவர் ஒரு தொழில்முறை 'மோகினியாட்ட' கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


