புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

சம்பளப் பாக்கி தரவில்லை என்று சொன்னதற்கு ஆதாரம் உள்ளது: கெளதமி

கமல் ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்பளப் பாக்கியைத் தரவில்லை என்று கெளதமி...

News image
Updated On :27 பிப்ரவரி 2018, 6:04 am

எழில்

கமல் ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்பளப் பாக்கியைத் தரவில்லை என்று கெளதமி சில நாள்களுக்கு முன்பு புகார் கூறினார். கமல் ஹாசனுடன் தனிப்பட்ட முறையிலோ தொழில் ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். 

நடிகர் கமல் ஹாசன் சம்பளப் பாக்கி வைத்துள்ளதாக புகார் கூறிய கெளதமி அதுகுறித்த விளக்கத்தை இன்று அளித்துள்ளார். அவருடைய வலைத்தளத்தில் கூறியதாவது:

நான் உழைத்த படங்களுக்கான சம்பளத்தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இதுகுறித்துப் பேசியதால் மோசமான எதிர்வினைகளை எதிர்கொள்கிறேன். அவர்களுக்கு நான் கூறுவது குறித்து எவ்வித விவரமும் தெரியாது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்.

எந்தக் காரணமும் இல்லாமல் ஆதாரமும் இல்லாமல் ஒருவரைப் பற்றி நான் கூற மாட்டேன். நான் ஆதாரத்துடன் தான் பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.