நடிகை பாவனாவின் திருமணம் இன்று நடைபெற்றது! (படங்கள்)
திருச்சூரில் உள்ள கோயிலில் நவீன் - பாவனா ஆகிய இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது...


பிரபல நடிகை பாவனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருச்சூரில் நடைபெற்ற திருமணத்தில் காதலர் நவீனைக் கரம்பிடித்தார்.
கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவந்தார் நடிகை பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் பாவனா தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் கடந்த வருட மார்ச் மாதம்தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று, திருச்சூரில் உள்ள கோயிலில் நவீன் - பாவனா ஆகிய இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மஞ்சு வாரியர், நவ்யா நாயர், பூர்ணா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். இத்திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...