ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திடீரென அறிவிக்கப்பட்ட 2.0 பட வெளியீட்டுத் தேதி! தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் ரஜினி - ஷங்கர் படம்!

ஒருவழியாக, விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் குறித்த தேதிக்குள் முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்...

News image
Updated On :11 ஜூலை 2018, 5:18 am

எழில்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.

கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த வருட தீபாவளிக்கும் வெளியாகாத நிலையில் விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்கள் தீபாவளியன்று வெளியாகவுள்ளன.

இந்நிலையில் 2.0 படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம்  தகவல் அளித்தது. மேலும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து ட்வீட் செய்த இயக்குநர் ஷங்கர், ஒருவழியாக, விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் குறித்த தேதிக்குள் முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.  படம் நவம்பர் 29 அன்று வெளியாகும் என்று அறிவித்தார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.