நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் விஜய்க்கு தமிழில் ரசிகர்கள் உள்ள அளவிற்கு மலையாளத்திலும் உள்ளனர். கேரளாவில்
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்க்கு தமிழில் ரசிகர்கள் உள்ள அளவிற்கு மலையாளத்திலும் உள்ளனர். கேரளாவில் அவர் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனவை. கோலிவுட் நடிகரான விஜய்க்கு மல்லுவுட் ரசிகர்கள் சிலை திறந்தும் கௌரவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தமிழகத்தில் நடந்த சம்பவங்கள், அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் விஜய் தன் பிறந்த நாளை (ஜூன் 22) விமரிசையாக கொண்டாடப் போவதில்லை என முடிவெடுத்து ரசிகர்களிடம் முன்பே அறிவித்துவிட்டார். மேலும் தூத்துக்குடிக்கு நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். இது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று விஜய் கூறிவிட்டார் எனினும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாட தயாராகி விட்டனர். அதன் முதல் கட்டமாக மல்லுவுட் விஜய் ரசிகர்கள் கேரள மாநிலத்தில் 30 நகரங்களில் உள்ள 30 வெவ்வேறு தியேட்டர்களில் விஜய் நடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்ய முயற்சிக்கின்றனர். கில்லி, போக்கிரி, தெறி, துப்பாக்கி, தலைவா, கத்தி, வேலாயுதம், மெர்சல் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. விரைவில் மற்ற படங்களையும் விஜய் பிறந்த நாளன்று மறுவெளியீடு செய்ய ஆவன செய்வோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com