/

வெளியானது சூர்யா, செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்! 

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் திங்களன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:24 pm

DIN

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் திங்களன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 36-ஆவது படத்தினை தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் சூரியாவுக்கு ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா எடிட் செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் சூர்யா திங்கள் மாலை 5 மணிக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.