நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் உருவாவிருக்கிறது. இந்தியன் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் தயாராகி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு கலை இயக்கம் டி.முத்துராஜ். இசை அனிருத்.

இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். அவருடன் இணைந்து கபிலன் வைரமுத்துவும் வசனம் எழுத இருக்கிறார். தற்போது மூன்றாவதாக, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் இந்தப் படத்துக்கு வசனம் எழுத உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உப்பு நாய்கள், கானகன், நீல நதி, மயானக் காண்டம், யாக்கை, வசுந்திரா என்னும் நீல வண்ணப் பறவை, மச்சம், நீலப்படம், உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள இவருக்கு 2016-ம் ஆண்டில் 'கானகன்' நாவலுக்காக 'யுவ புரஸ்கார்' வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்தபாலனிடம், 'காவியத் தலைவன்', 'அரவான்' படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் இவர். ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், '2.O' திரைப்படத்தில் மேக்கிங் ஆஃப் எந்திரன் 2.O-வை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



