மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழா மேடையில் நடிகை காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளரால் சர்ச்சை (விடியோ) 

தெலுங்குப் படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில், நடிகை காஜல் அகர்வாலை அப்படத்தின் ஒளிப்பதிவாளார் முத்தமிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2018, 2:26 pm

DIN

ஹைதராபாத்: தெலுங்குப் படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில், நடிகை காஜல் அகர்வாலை அப்படத்தின் ஒளிப்பதிவாளார் முத்தமிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

தமிழில் துப்பாக்கி, விவேகம் மற்றும் மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நடிகர் பெல்லம் கொண்டா சீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் ஆகியோர் நடித்துள்ள கவசம் என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. 

அந்த விழா மேடையில் காஜல் அகர்வால் பேசிக்கொண்டு இருந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு திடீரென்று காஜலின் அருகில் சென்று காஜலை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். 

இதை எதிர்பாராத காஜல் அகர்வால் சமாளித்துக் கொண்டு சிரித்தபடி தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.  ஆனாலும் ஒளிப்பதிவாளரின் செயல் பார்வையாளர்களுக்கு முகச்சுளிப்பை  ஏற்படுத்தியது. 

சமூக வலைத்தளங்களிலும் இது பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை முத்தமிட்டது முறையற்ற செயல் என்ற ரீதியில் ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.  

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.