மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஜய்க்கு ஜோடியாக நடிக்காதது குறித்து நடிகை ரேஷ்மிகா ட்வீட்!

விஜய் - அட்லி படத்தில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தமுறை..

News image
Updated On :28 நவம்பர் 2018, 9:30 am

எழில்

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நகைச்சுவை நடிகராக விவேக் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு எனத் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.

முதலில் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கன்னட நடிகை ரேஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தன்னிடம் இந்தப் படம் குறித்து ஆர்வமாக விசாரித்த ரசிகர்களுக்கு ரேஷ்மிகா கூறியதாவது:

விஜய் - அட்லி படத்தில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தமுறை அது நடக்காததால் அவர்களுடன் அடுத்த முறை இணைவேன் என எண்ணுகிறேன். உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு என்னை மிகவும் சந்தோஷமாக்குகிறது. தமிழில் விரைவில் அறிமுகமாவேன். உங்கள் அன்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப் பதிவில் நன்றி என்று தமிழில் எழுதியுள்ளார் ரேஷ்மிகா. 

கர்நாடகாவைச் சேர்ந்த ரேஷ்மிகா, 2016-ல் வெளியான கிரிக் பார்ட்டி என்கிற கன்னப் படமாகத் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான கீத கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தின்  ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடலில் நடித்து மேலும் புகழை அடைந்தார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.