த்ரிஷ்யம் புகழ் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் இணைகிறார் கார்த்தி!
த்ரிஷ்யம் புகழ் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் விரைவில் தனது பெயரிடப்படாத அடுத்த திடைப்படத்துக்காக தமிழ் நடிகர் கார்த்திடன் இணையவிருக்கிறார். பாபநாசத்திற்குப் பிறகு ஜீத்துவின் இரண்டாவது தமிழ் படம் இது. தற்போது காளிதாஸ் ஜெயராமை வைத்து ஒரு மலையாளப் படத்தை இயக்கக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்தியுடனான படத்தின் ஷூட்டிங்கை தொடங்கவிருக்கிறார் ஜீது.
இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர் படக்குழுவினர். ஜீத்து சமீபத்தில் இயக்கிய முதல் ஹிந்தி படம் 'தி பாடி’ இதில் எமிரான் ஹஷ்மி மற்றும் ரிஷி கபூர் நடித்துள்ளனர். அண்மையில் இதன் படப்படிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் மலையாளத்தில் மோகன்லாலில் மகன் பிரணவ் மோகன்லால் அறிமுகமாக வெற்றி பெற்ற ஆதி எனும் திரைப்படத்தில் மொழியாக்கம் ஆகும்.
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்குப் பின் கார்த்தி அடுத்து தேவ் எனும் படத்தில் நடிக்கிறார். இது அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கரின் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது. தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்குப் பின் ரகுல் ப்ரீத் சிங்குடன் நடிக்கிறார் கார்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

