சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா: படப்பிடிப்பு தொடக்கம்!
சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன...


இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சூர்யா. இப்படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ். சூர்யாவின் 38-வது படம் இது. ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.
இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ள சூழ்நிலையில் நேற்று படப்பூஜை நடைபெற்றது. சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி தேர்வாகியுள்ளார். இவர் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...