ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அடுத்தடுத்து படங்கள் இயக்கும் சீனு ராமசாமி: புதிய பட அறிவிப்பு!

இந்த வருடம் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்கு படங்கள் (கண்ணே கலைமானே, மாமனிதன், இடம் பொருள் ஏவல், அருள்நிதி நடிக்கும் படம்) வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 8:49 am

எழில்

விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி அடுத்ததாக அருள்நிதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்மூலம் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி.

2016-ல் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை வெளிவந்தது. அதன்பிறகு 3 வருடங்கள் கழித்துதான் சீனு ராமசாமி இயக்கிய படம் வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே தனது அடுத்தப் படமான மாமனிதன் படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் முடித்துவிட்டார் சீனு ராமசாமி. இந்நிலையில் இவருடைய அடுத்தப் படம் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதோடு, விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படம் பல வருடங்களாக வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் இந்த வருடம் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்கு படங்கள் (கண்ணே கலைமானே, மாமனிதன், இடம் பொருள் ஏவல், அருள்நிதி நடிக்கும் படம்) வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.